முகாமைத்துவத்தை நீக்க வேண்டும் – விமான நிறுவன தொழிற்சங்கங்கள்!

Monday, December 18th, 2017

புதிய முகாமைத்துவத்தின் கீழ் ஶ்ரீலங்கா விமான நிறுவனம் மீள் புனரமைக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவன தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நிலவும் முகாமைத்துவத்தின் கீழ் நிறுவனத்தை புனரமைத்தால் எதிர்ப்பார்க்கும் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போகும் என விமான ஓட்டிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் தனது நண்பரை சிங்கப்பூரிலிருந்து வரவழைத்து மத்திய வங்கிக்கு தலைவராக்கியமையால் அது அழிவுக்குள்ளானது.

தற்போது விமான நிறுவனத்தை அழிவுக்கு உள்ளாக்குவதற்கு தனது நண்பனான சரித்த ரக்வத்தவின் மகனான சுரேன் ரக்வத்தவை பிரதான நிறைவேற்று அதிகாரியாக நியமித்துள்ளார். நட்பின் நிமித்தமே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை விமான நிறுவனத்தின் புனரமைப்பிற்காக அரச அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவொன்று தற்போது நியமிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி அந்த குழுவின் அறிக்கை நிறைவு செய்யப்படவுள்ளது.

இதேவேளை விமான நிறுவனத்தை இலாபமீட்டும் நிலைக்கு கொண்டு செல்வதற்கான எட்டு பிரேரனைகள் அடங்கிய கடிதமொன்றை ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் சுதந்திர சேவையளார் சங்களம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

நட்டம் ஏற்படும் விமான பயணங்களை இயன்றளவு குறைத்து உச்ச பட்ச இலாபத்தை பெற்றுக் கொள்ளுதல் , எதிர்வரும் ஜந்து ஆண்டுகளுக்கான நடைமுறை சாத்தியமிகு திட்டங்களை வகுத்தல் மற்றும் சிவில் விமான சேவை தொடர்பான அறிவு சார் குழுவொன்றை ஸ்தாபித்தல் உள்ளிட்ட அந்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Related posts:

தீபாவளி பண்டிகையை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடங்கள் - இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப...
மின்சார சபை பொறியியலாளர் சங்கத்திற்கு 14 நாள்கள் தடை உத்தரவை பிறப்பித்தது கொழும்பு மாவட்ட நீதிமன்றம்...
வற் வரி அதிகரிப்பு கொள்கை - 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும் - முன...

சிறுவர் உளவியல் பற்றிக் கவனம் செலுத்தியே தரம் 5 பரீட்சை பற்றித் தீர்மானிக்க வேண்டும் - கல்வி அமைச்சர...
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - தேசிய புற்றுநோய் ஒழிப்புப்ப...
இலங்கையின் கூட்டிணைவை பாராட்டும் அமெரிக்கா – உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாகவும் ஜனாதிப...