ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் திருமலை வீரமாநகர் மக்களது குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!

Thursday, May 3rd, 2018

திருகோணமலை வீரமாநகர் பிரதேச மக்கள் எதிர்கொண்டுவந்த குடிநீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது.

குடிநீரின்மையால் நாளாந்தம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுவந்த குறித்தபகுதி மக்கள் தமக்கான தூய குடிநீருக்கான விமோசனம் பெற்றுத் தருமாறு கோரி திருகோணமலை மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த பகுதி மக்களது குடிநீர் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் திருமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவல் அவர்களுடன் தொடர்புகொண்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துக் கூறியதன் பிரகாரம் குறித்த பகுதியிலுள்ள 21 இடங்களில் குழாய் வழியாக குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம் நீண்டகாலமாக வீரமாநகர் பிரதேச மக்கள் எதிர்கொண்டுவந்த தூய குடிநீருக்கான பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: