இ.போ.ச பணியாளர்களின் விடுமுறைகள் இரத்து!

ஓய்வுபெற்ற தொடருந்து இயந்திர சாரதிகளை இன்று காலை 6.00 மணிக்கு சேவைக்குச் சமூகமளிக்குமாறு தொடருந்து திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
இதனுடன் தொடருந்து பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவடையும் வரை இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
வேதன பிரச்சினையை முன்னிறுத்தி சில தொடருந்து தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் 3.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் தொடருந்து நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் இயந்திர சாரதிகள் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சிறையில் இருந்து பரீட்சை எழுதும் ஆவா குழு உறுப்பினர்கள்!
ஹைபிரிட் வாகன பற்றரிகளினால் சூழலுக்கு அச்சுறுத்தல்!
இரணைதீவு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 5 இலட்சம் ரூபா நிதியுதவி!
|
|