இரணைதீவு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 5 இலட்சம் ரூபா நிதியுதவி!

Monday, April 30th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் மாகாண சபை உறுப்பினர் பிரதேச சபை உறுப்பினர்களின் நிதிதிட்டத்தின் ஊடாக இரணைதீவு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய முன்வந்து இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாகாண சபை உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளருமான  வை தவநாதன் அவர்கள் உறுதியளித்துள்ளார்

இரணை தீவில் தமது காணிகளை விடுவிக்ககோரி போராடும் மக்களுக்கான கட்சியின் தார்மீக ஆதரவை வழங்கும் பொருட்டு கட்சியின் செயர்பாட்டளர்களுடன் இரணைதீவு மக்களை நேற்று சந்தித்த மாகாண சபை உறுப்பினர் வை தவநாதன் அவர்கள் அங்கு போராடும் மக்கள் மத்தியில் கருத்து தெருவிக்கும் பொது இவ்வாறு தெருவித்தார்

மீள குடியேற்றத்திற்கு பின்னர் இந்த கிராம மக்களுக்கு பொது வேலைத்திட்டம் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு என பல உதவிகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வழங்கி உள்ளதாகவும் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக சொந்த இடத்தில் மீள் குடியேற முடியாத நிலையில் பல போராட்டங்களை முன்னெடுத்த மக்கள் அவை நின்று போராடுவதற்கு தமது ஆதரவை வழங்கிறோம் எனவும் வை தவநாதன் அவர்கள் தெருவித்தார் அவர் மேலும் தெருவிக்கையில்

எங்கள் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்த இரணைதீவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் நாடாளுமன்றில் பல தடவைகள் குரல் கொடுத்து வருகின்றார் அதே போன்ற

நானும் மாகாண சபையில் இந்த விடயம் தொடர்பாக பல தடவைகள் கதைத்து இருக்கிறேன் முன்னொரு காலத்தில் விடுதலை போராட்டங்களுக்கு மக்கள் ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்தவர்களாகவே இருகின்றனர் இப்பொழுது போராளிகளாக இருந்த நாம் மக்களின் போராட்டத்திற்கு முடிந்தளவு ஆதரவு அளித்து வருகின்றோம் எங்கள் அதரவு எப்போதும் இருக்கும் எனவும் வை தவநாதன் தெரிவித்தார்

இதன் பின்னர் போராடும் மக்களுக்கான ஒரு தொகுதி உணவு பொருட்களை இரணைதீவு மக்களின் பிரதிநிதியும் பூநகரி பிரதேச சபை உறுப்பினருமான பிரதீபன் அவர்களிடம் கையளித்தார்

தமது காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  தம்மை சந்தித்ததை ஈட்டு இரணைதீவு மக்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு தமது நன்றிகளை தெயவித்ததொடு தமது போராட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவினை தாம் தொடர்ந்து எதிர்பார்பதாக அவர்கள் தெருவித்தனர்

Related posts: