இவ்வருட காலாண்டுப் பகுதியில் வீதி விபத்துகளில் 936 பேர் உயிரிழப்பு!
Thursday, May 5th, 2016
இந்த ஆண்டு இதுவரை வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 936 ஆக அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபை அறிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் விபத்துக்களினாலேயே அதிக உயிர்ச் சேதங்கள் ஏற்படுவதாக சபையின் செயலாளர் டாக்டர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் மற்றும் பாதசாரிகள் விபத்துக்களில் அதிகமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கவனயீனம் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துதல் என்பவற்றினாலேயே அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
இரத்மலானை விமான நிலையம் அபிவிருத்தி!
நாட்டை கட்டியெழுப்ப ஆராய்ச்சித் துறைகளின் ஒத்துழைப்பு தேவை!
பிறப்பு எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சி - பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணி...
|
|
|


