இவ்வருடம் டெங்கு நோயினால் 37 பேர் உயிரிழப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!
Monday, July 31st, 2023
இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை 56,228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதில் 27, 883 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள், கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 12,154 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த 2022 ஆம் ஆண்டின் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசில் இருப்பதற்குப் பொருத்தமற்ற ஒருவரே சரத் வீரசேகர - அமைச்சர் மனுஷ சுட்டிக்காட்டு!
சிலரின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்திற்கு களங்கம் ஏற்படுகின்றது - களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்ட...
தேயிலை ஏற்றுமதி மூலம் ஈரானுக்கு 20 மில்லியன் டொலர் எண்ணெய் கடனை இலங்கை செலுத்தியுள்ளது – திருப்தி தெ...
|
|
|


