இவற்றை மீறினால் 25,000 அபராதம்!

Monday, November 21st, 2016

போதையில் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட முக்கிய ஆறு குற்றச்சாட்டுக்களுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக அதிகரிக்கப்படுவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க,

  1. குடி போதையில் வாகனம் செலுத்துதல்
  2. வேகமாக வாகனத்தைச் செலுத்துதல்
  3. அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துதல்
  4. காப்புறுதி செய்யப்படாத வாகனத்தை செலுத்துதல்
  5. இடது கை பக்கத்தில் வாகனத்தை முந்துதல்
  6. புகையிரத பாதுகாப்பு கடவையை பொறுப்புணர்ச்சியற்ற வகையில் கடத்தல் போன்ற ஆறு வகையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு இன்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே குறித்த இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கெமுணு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Nimal-Siripala-De-Silva_21

Related posts:

சிங்கள பௌத்த மக்களுக்கு இருக்கும் உரிமை சிறுபான்மை மக்களுக்கும் இருக்கவேண்டும் - அமைச்சர் லக்ஸ்மன் க...
இவ்வாண்டில் கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள்களுடன் 61,300 பேர் கைது - பிரதி பொலிஸ் மா அதிபர் !
கல்விக்கான பிராந்திய கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்படும் - பாடசாலைக் கல்வி கட்டமைப்பு வேலைத்திட்டத்...