இலாபமீட்டும் அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்படாது– அமைச்சர் டிலான் பெரேரா!

இலாபமீட்டும் அரச நிறுவனங்களை விற்பனை செய்ய இடமளிக்கப்படாது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
நட்டமடையும் அரச நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். எனினும், லாபமீட்டும் அரச நிறுவனங்களை விற்பனை செய்ய ஜனாதிபதி உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இடமளிக்க மாட்டார்கள். நட்டமடைந்துள்ள அரச நிறுவனங்களைக் கூட தனியாருக்கு விற்பனை செய்யாது தனியாருடன் இணைந்து லாபமீட்டச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
அரச நிறுவனங்களை விற்பனை செய்வது குறித்து வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தால் அது திருத்திக் கொள்ளப்பட வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணங்காத வரவு செலவுத்திட்ட யோசனைகள் வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பிற்கு முன்னதாக திருத்திக்கொள்ளப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|