உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் – அரசியல்வாதிகளின் அறிக்கைகள் தலையீடு செய்கின்றன – இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்குழு தெரிவிப்பு!

Sunday, March 12th, 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த மற்றும் ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோரின் அறிக்கைகள் தலையீடு செய்வதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலுக்காக பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை தடுப்பதற்கு எதிராக நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை, நாடாளுமன்ற சிறப்புரையை மீறும் செயல் என்று இந்த இரண்டு ஆளும் கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தனர்;.

இது, இலங்கை நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று சட்டத்தரணிகளின் செயற்குழு குறிப்பிட்டுள்ளது.

நீதித்துறையின் சுதந்திரமானது இலங்கை மக்களினது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். அத்துடன் நாட்டின் பிரஜைக்கும், அரசுக்கும் இடையில் நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த சுயாதீனமான நீதித்துறை அவசியம் என்பதை அரசின் அனைத்து உறுப்புகளும் அங்கீகரிக்க வேண்டும் என்று சட்டத்தரணிகளின் அறிக்கை வலியுறுத்துகிறது.

இந்தநிலையில் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் எந்தவொரு முயற்சியும் சட்டத்தின் ஆட்சி மற்றும் நாட்டின் மக்களின் உரிமைகளுக்கு அவமானமாகும்.

நீதித்துறைக்கு இது போன்று அவமானங்கள், சட்டப்படி நீதி வழங்கும் நீதிமன்றத்தின் திறனை குறையச்செய்துவிடும்.

எனவே வரலாற்றின் படிப்பினைகளில் இருந்து இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை தவிர்க்க வேண்டும் அரசாங்கத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்குழு சுட்டிக்காட்டியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: