பேக்கரி பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பொது மக்களுக்கு வட் வரி சலுகையை பெற்றுக் கொடுப்பதில்லை!
Saturday, January 18th, 2020
பேக்கரி பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பொது மக்களுக்கு வெட் வரி சலுகையை பெற்றுக்கொடுப்பது இல்லை என உள்நாட்டு வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெட் வரி சலுகை பொது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படுவதில்லை என கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக உள்நாட்டு வருமான வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் நாதுன் கமகே தெரிவித்துள்ளார்.
ஆகவே பொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்கள் மீது வெட் வரி சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உள்நாட்டு வருமான வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் நாதுன் கமகே மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பாடசாலை மாணவர்களுக்கான வீதிப் போக்குவரத்து அங்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு
யாழ்ப்பாணத்தில் நிர்க்கதியாகி நிற்கும் பிற இடத்தவர்களுக்கு நிவாரணம் வழங்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ந...
ஜனாதிபதிக்கும் சுயாதீன நாடாளுமன்ற குழுவினருக்கும் இடையில் இன்று மீண்டும் சந்திப்பு!
|
|
|


