இலத்திரனியல் கடவுச்சீட்டை விநியோகிக்க நடவடிக்கை – குடிவரவு குடியகல்வு திணைக்களம்!

Monday, January 7th, 2019

நடப்பாண்டில் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை தரமிக்கதாக மேம்படுத்தி இலத்திரனியல் கடவுச்சீட்டாக விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக தற்போது கேள்வி மனு கோரப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் நடுப்பகுதியில் இந்த இலத்திரனியல் கடவுச்சீட்டை விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அனைத்து நாடுகளுக்குமான வெளிநாட்டு கடவுச்சீட்டு மாத்திரமே விநியோகிக்கப்படுவதாக திரு.ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

இதுவரை மத்திய கிழக்கு நாடுகளுக்காக மாத்திரம் விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.

குடிவரவு குடியகல்வு திணைக்களம் கடந்த வருடத்தில் ஐந்து இலட்சம் கடவுச்சீட்டுகளை விநியோகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மிளகாய்த்தூளிலும் விஷம்? - சுகாதார பாதுகாப்பு நிலைமைகள் குறித்து வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துமா...
விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ...
இரண்டு மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாடு நிவர்த்திக்கப்படும் - சுகாதார அமைச்சர் அறிவிப்பு!