இலட்சம் சமுர்த்தி குடும்பங்களுக்கு சூரிய சக்தியில் இயங்கும் சோலார் கூரைகளை பொருத்துவதற்கு நடவடிக்கை – மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவிப்பு!

Saturday, October 3rd, 2020

சூரிய சக்தியைக் கொண்டு தேசிய மின்சக்தி கட்டத்தில் 1500 மெகாவோட் மின்சாரத்தை இணைப்பது தொடர்பில் மின்சக்தி அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும, சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, மின்சார சபைத் தலைவர் விஜித ஹேரத் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

இதன்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இலட்சம் சமுர்த்தி குடும்பங்களுக்கு சூரிய சக்தியில் இயங்கும் சோலார் கூரைகளை பொருத்துவதற்கும்  கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:

இன்புளுவன்ஸா வைரசுக்கான மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
பதிவினை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் அறவிடுவதை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைக்க சுற்றுலா அபிவிருத்தி ...
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்திப்பு - உறவுகளை பல்வேறு...