பணிப்புறக்கணிப்பினை கைவிட தொழிற்சங்கங்கள் தீர்மானம்!
Monday, October 7th, 2019
ரயில் சேவையானது அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் கடந்தவாரம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இன்றையதினம் தொடர்ந்தும் 12 ஆவது நாளாகவும் ரயில்வே தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பணிப்புறக்கணிப்பினை நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை தேர்தல்காலங்களில் இவ்வாறான பணிப்பகிஷ்கரிப்பு போராட்டங்களில் ஈடுபடாது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமென சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் இலங்கைக் கடற்படைக்கு கையளிப்பு!
கட்டுப்பாட்டின் கீழ் கார்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை உருவாக்க வேண்டும் - வாகன இறக்குமதியாளர்கள்...
இந்திய - இலங்கை கிரிட் இணைப்பு திட்டம் - தொழில்நுட்ப விபரங்கள் எதிர்வரும் செப்டெம்பரில் நிறைவடையும்!
|
|
|


