இலங்கை விமானப்படைக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அம்பியூலன்ஸ்!
Tuesday, June 20th, 2017
ஜப்பான் – இலங்கை நட்புறவு மன்றத்தினால் நவீன தொழிநுட்பத்துடனான அம்பியூலன்ஸ் மற்றும் தீயணைப்பு இயந்திரம் என்பன ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜப்பான் இலங்கை நட்புறவு மன்ற தலைவர் கலாநிதி லால் திலகரத்ன மற்றும் திருமதி எரங்கா திலகரத்ன ஆகியோரால் அவற்றுக்குரிய ஆவணங்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டன.
மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரணவின் வேண்டுகோளுக்கமைய இலங்கை விமானப்படைக்காக 450 இலட்சம் பெறுமதியான தீயணைப்பு இயந்திரம் மற்றும் 350 இலட்சம் பெறுமதியான நவீன தொழிநுட்பத்துடனான அம்பியூலன்ஸ் ஆகியவை கையளிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வருகின்றது பாதுகாப்பு பட்டியுடனான விசேட முச்சக்கரவண்டி!
பதாதைகளை காட்சிப்படுத்தக் கூடாது என்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் முடிவல்ல - மஹிந்த தேசப்பிரிய !
துறைமுக நகரில் டிஜிட்டல் பணத்தை பயன்படுத்த அனுமதி - துறைமுக நகரின் விசேட பொருளாதார பிராந்திய நிர்வாக...
|
|
|


