மீனவரை கடற்படை சுட்டதற்கான சாட்சியங்கள் இல்லை – கடற்படை!

Monday, March 13th, 2017

இந்திய மீனவரை கடற்படையினர் சுட்டுக்கொன்றாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கடற்படையினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான எவ்வித சாட்சியங்களும் இல்லை என இலங்கை கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது நடத்தப்படும் விசாரணைகளுக்காக இந்திய கடலோர பாதுகாப்பு அதிகாரிகளிடம் தகவல்களை கோரியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். எனினும் சம்பவம் குறித்து கடற்படை விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கச்சதீவு அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் தமிழக மக்கள் எவரும் பங்கேற்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் கடற்படைத் தளபதி கச்சதீவில் விழா முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் அண்மையில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தமிழக மீனவர்கள் தெரிவித்திருந்தனர். கச்சதீவுக்கு அருகில் இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

Related posts: