இலங்கை விஜயம் குறித்து தமிழ் சிங்களம் ஆங்கில மொழிகளில் ருவிற்றர் பதிவு செய்த இந்திய பிரதமர்! 

Thursday, May 11th, 2017

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொள்வது சர்வதேச வெசாக் தின வைபவம் மற்றும் வேறுசில நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதற்காகவே என்று அவர் தனது ருவிற்றர் சமூக இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இணையத்தளத்தில் தமிழ் சிங்களம் ஆங்கில மும்மொழிகளிலும் பதிவு இதனை செய்துள்ளமை விசேட அம்சமாகும்.

modi_msg_twitter

இந்திய பிரதமரின் இந்த பதிவில் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தனது இலங்கைக்கான இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயமாகும் என்றும் இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகள் மேலும் வலுவடைவதற்கு பெரும் உதவியாக அமையுமென்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் இன்று மாலை இலங்கைக்கு விஜயம் செய்வதுடன் இங்கு நடைபெறும் ஐ.நா.வெசாக் வைபவம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: