இலங்கை வரலாற்றில் உருவாகிய அரசாங்கங்களில் இதுவே மிகவும் பலமான அரசாங்கம் – ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி புகழாரம்

Saturday, August 22nd, 2020

இலங்கையின் வரலாற்றில் உருவாகிய அரசாங்கங்களில் இதுவே மிகவும் பலமான அரசாங்கம். இதனை 1970 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்துடன் மாத்திரமே ஒப்பிட முடியும்.

எனினும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அரசாங்கம் 1970 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தை விட பலமானது என என பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

கோட்டாபயவின் கீழ் 15 ஆண்டுகள் வாழ மனதை தேற்றிக்கொள்ள வேண்டும் என நான் 2009 ஆம் ஆண்டு கூறினேன். அது இன்று நிஜமாகியிருக்கிறது.

அத்துடன் 2015 ஆம் ஆண்டு தோற்டிக்கப்பட்டது மகிந்த ராஜபக்சவின் திட்டமே அன்றி கோட்டாபயவின் திட்டம் அல்ல. மகிந்தவின் அரசாங்கத்தை கவிழ்த்தது போல கோட்டாபயவின் அரசாங்கத்தை கவிழக்க முடியாது.

இன்று கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான மாற்று சக்தியை கண்களுக்கு எட்டிய தூரம் வரை காணமுடியவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களின் வெற்றிகளை தீர்க்கமாக ஆராயந்த பின்னரே அரசாங்கத்திற்கு எதிராக வாயை திறக்க முடியும் என அவர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: