இலங்கை – ரஷ்யா இடையே 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு முத்திரைகள் கண்காட்சி!
Friday, March 31st, 2017
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளின் 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு முத்திரைகள் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சி கொழும்பில் உள்ள ரஷ்ய மத்திய நிலையத்தில் எதிர்வரும் 3ம் திகதி சம்பிருதாயபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.
காலை 9.00 மணிமுதல் மாலை 6.30 மணி வரை இடம்பெறவுள்ள இந்த கண்காட்சி ஏப்ரல் மாதம் 5ம் திகதிவரை நடைபெறும்.
சோவியத் மற்றும் ரஷ்யா தொடர்பான 100க்கு மேற்பட்ட முத்திரைகள் இதில் இடம்பெறவுள்ளன. அனுரசமர சேகரித்த முத்திரைகள் இந்த கண்காட்சியில் வைக்கப்படவுள்ளது.
Related posts:
அமெரிக்காவின் 29 நகரங்களில் அவசர நிலை!
கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் விசனம் - முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்!
அரச இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல்!
|
|
|


