இலங்கை – ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்!
Monday, November 22nd, 2021
இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் ரஷ்ய எரோஃப்ளோட் விமான சேவையின் முதலாவது விமானம் 240 பயணிகளுடன் நேற்றையதினம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
வாராந்தம் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரண்டு தடவைகள் இந்த விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதனை வாராந்தம் 5 சேவைகளாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான விமான சேவையை முன்னெடுக்கும் பழமையான விமான சேவைகளில் ஒன்றாக ஏரோஃப்ளோட் திகழ்கின்றது.
இந்த விமான சேவை 1964 ஆம் ஆண்டுமுதல் இலங்கைக்கான விமான சேவையை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோப்பாயில் நீண்டகாலமாக கசிப்பு உற்த்தியில் ஈடுபட்டவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது - 340 ...
பெப்ரவரி மாத பிற்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் - தேர்தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை!
கிளிநொச்சி சட்டவிரோத மணலை மக்களுக்கு பகிர்ந்தளிக்க அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!
|
|
|


