இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு – முன்மொழியப்பட்ட வரைபடத்திற்கும் கால அட்டவணைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் !
Tuesday, April 18th, 2023
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்மொழியப்பட்ட வரைபடத்திற்கும் கால அட்டவணைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்..
அதன்படி, மே மாத இறுதிக்குள் புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு பணியகத்தை நிறுவுவதற்கும், செயல்முறை மற்றும் மறுசீரமைப்புத் திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, USAID மற்றும் JICA போன்ற மேம்பாட்டு நிறுவனங்களின் ஆதரவைப் பெறுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்ணாண்டோ ரி.ஐ.டியினரால் விசாரணை!
நாளை பிறக்கிறது ஹேவிளம்பி தமிழ் வருடப்பிறப்பு !
ஜூலை ஒன்றுமுதல் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முன்மொழிவு - அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
|
|
|


