இலங்கை மத்திய வங்கி முறி விற்பனையால் அரசாங்கத்துக்கு நட்டம் இல்லை!- உலக வங்கி!
Friday, February 10th, 2017
மத்திய வங்கி முறி விற்பனை குற்றச்சாட்டு விடயத்தில் இலங்கையின் கணக்காய்வாளர்நாயகத்தின் அறிக்கையை மதிப்பீடு செய்யவில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி முறி விற்பனை விடயத்தில் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை உலகவங்கி, மதிப்பீடு செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இதனை மறுத்து உலக வங்கி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கியின் முறி விற்பனை தொடர்பில் தமது கருத்தை வெளியிட்டு உலக வங்கிபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக முன்னதாக தகவல்கள்வெளியாகியிருந்தன. அதில் மத்திய வங்கி முறிவிற்பனையால் இலங்கை அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படவில்லைஎன்று உலக வங்கி சுட்டிக்காட்டியிருந்தது.
இந்தநிலையில் குறித்த விடயத்தில் கணக்காய்வாளர் நாயகத்தின் மதிப்பீட்டைகருத்திற்கொள்ளவில்லை என்று உலக வங்கி நேற்று அறிவித்துள்ளது

Related posts:
டீசல் - பெற்றோல் இறக்குமதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75ஆவது பிறந்த தினம் இன்று !
ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைச்சின் 37 ஆவது ஆசிய பசுபிக் மாநாடு இலங்கையில் - அமைச்சர் மஹிந்த அமரவ...
|
|
|


