இலங்கை மக்களின் கணனி அறிவு அதிகரிப்பு!
Friday, November 30th, 2018
2017ம் ஆண்டுக்கான இலங்கை மக்களின் கணனி அறிவு 28.6 சதவீதம் என்று தெரியவந்துள்ளது.
புள்ளிவிபரவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. நகர்புறங்களிலேயே கணனி அறிவு அதிகமாக இருக்கிறது.
நகர்புறங்களில் வசிக்கின்றவர்களில் 40.5 சதவீதமானவர்கள் கணினி அறிக்கைக் கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டப் புறங்களில் கணினி அறிவு 27.1 சதவீதமாக நிலவுகிறது.
ஏனைய பின்தங்கிய பகுதிகளில் 9.1 சதவீதமானவர்களுக்கு கணினி அறிவு இருப்பதாக புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.
Related posts:
வாழ்வுக்காக வீதியில் போராடும் தொண்டராசிரியர்கள்!
அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிப...
டொலரின் பெறுமதியில் மாற்றம் - தங்கத்தின் விலையும் பாரிய அளவில் வீழ்ச்சி!
|
|
|


