இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகளினது விடுமுறைகள் இரத்து!
Wednesday, November 30th, 2016
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் பணியாற்றும் அனைத்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான விடுமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 7 போக்குவரத்து குற்றச்சாட்டுக்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் பஸ் ஊழியர்கள் நாளை முதலாம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர்களது விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் 6ஆம் திகதி, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளமையால், அவர்களது பரீட்சைக்கு தடையாக இருக்க வேண்டாம் என்றும் இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் என்றும் இலங்கை அதிபர்கள் சங்கம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்

Related posts:
|
|
|


