இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 41.7 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்துள்ளது இலங்கை மத்திய வங்கி அறிக்கை!
Monday, May 2nd, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 2021 ஆம் ஆண்டளவில் 41.7 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு அரச நிறுவனங்களின் நிலுவைத் தொகை 2021ஆம் ஆண்டளவில் 161.1 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாணய மாற்று வீத ஏற்ற இறக்கங்களில் 33.2 பில்லியன் ரூபாவை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அலுமினிய தயாரிப்பு பற்றிய தொழில்நுட்ப செயலமர்வு!
வாடிக்கையாளரை எச்சரிக்கும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை!
சட்டம் ஒழுங்கை பேணத் தவறியதற்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்...
|
|
|


