இலங்கை – பாகிஸ்தானுக்கிடையேயான வெற்றிலை ஏற்றுமதி அதிகரிப்பு!

Monday, April 23rd, 2018

இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கான வெற்றிலை ஏற்றுமதி பாரியளவில் அதிகரித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஐயாயிரம் தொடக்கம் ஆறாயிரம் மெற்றிக் தொன் வெற்றிலைகளும்  தெங்கு, ஆடை, அரிசி, இரசாயனப் பொருட்கள், இயற்கை றப்பர், றப்பர்கையுறைகள், தேயிலை மற்றும் சுவையூட்டிகள் என்பனவும் அதிகம் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு பருத்தி நூல், சீமெந்து, இரசாயன உரம், மருந்துப்பொருட்கள் மற்றும் போக்குவரத்து சாதனங்கள் என்பன அதிகளவில் இறக்குமதிசெய்யப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: