இலங்கை பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்வதை இடை நிறுத்தியது எமிரேட்ஸ் !

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையை எதிர்வரும் 15 ஆம்திகதிவரை இடைநிறுத்த, எமிரேட்ஸ் விமான சேவை தீர்மானித்துள்ளது.
அத்துடன், கடந்த இரண்டு வாரங்களுக்கு மேற்படி நாடுகளுக்கு சென்றிருந்த எந்தவொரு பயணியும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் எந்தவொரு பகுதிக்கும் பிரவேசிக்க எதிர்வரும் 15 ஆம்திகதி வரை அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஐக்கிய அரபு இராச்சிய பிரஜைகள், அரபு இராச்சியத்தின் தங்க விசா அனுமதி பெற்றவர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு இந்த தடை விலக்களிக்கப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் விமான சேவைகள் அறிவித்தல் விடுத்துள்ளது.
இதேவேளை, இந்திய பயணிகள் தமது நாட்டுக்கு வருவதற்கும் நேற்றுமுதல் ஐக்கிய அரபு இராச்சியம் தற்காலிக தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|