இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க நியமனம்!
Tuesday, December 5th, 2023
இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றிலபேசிய விளையாட்டுதுறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய தெரிவுக்குழுவை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தார்.
இதன்படி, புதிய தேர்வுக் குழுவின் தலைவராக முன்னாள் டெஸ்ட் வீரர் உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவின் தலைமையில் தெரிவுக்குழு நியமிக்கப்படும் என அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவில் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தரங்க பரணவிதான மற்றும் பல டெஸ்ட் அணி வீரர்கள் உள்ளடங்குவதாக விளையாட்டு அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதன்படி, கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பதவியை வகித்த பிரமோத்ய விக்ரமசிங்க மற்றும் உறுப்பினர்களான ரொமேஸ் கலுவிதரன ஆகியோர் பதவிகளை இழக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


