இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு – இந்திய மீனவர்கள் 19 பேர் கைது !
Thursday, February 8th, 2024
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இன்று நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழில் நெற்செய்கையில் 50 வீத அறுவடைப் பணிகள் முழுமை!
QR முறைமையை பயன்படுத்துவது தொடர்பில் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டம் முன்னெடுப்பு!
மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி !
|
|
|


