அடிப்படைவாத செயற்பாகளை தூண்டுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்!

Thursday, June 6th, 2019

அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையான முறையில் நடைமுறைப்படுத்துமாறு அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கு தான் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, அனைத்து பிரதிக் காவல்துறைமா அதிபர்களும் நாளை மறுதினம் ஜனாதிபதி செயலகத்திற்கு விசேட கலந்துரையாடலுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சரவை அமைச்சர்களும் பங்குகொள்வதற்கான வாய்ப்புள்ளதாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில், தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றைக் காண முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போலி செய்திகள் மற்றும் பிரசாரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில், தண்டனை சட்ட சரத்துகள் மற்றும் குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி போலி செய்திகள் மற்றம் போலி பிரசாரம் தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்படுபவருக்கு 10 இலட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிப்பதற்கு அல்லது 5 ஆண்டுகால சிறை தண்டனை விதிப்பதற்கு அல்லது அந்த இரண்டு தண்டனைகளையும் வழங்குவதற்கு ஏற்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் வெறுப்புணர்வு பிரசாரம் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்டத்திருத்தங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.இதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி குற்றம் நிரூபிக்கப்படுகின்றவருக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

Related posts: