நல்லூர் ஆலய காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு கல்வியங்காட்டில் இடம்பெற்றது!
Thursday, August 10th, 2023
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (10) கல்வியங்காட்டில் இடம்பெற்றது.
வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தக்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களுக்கான காளாஞ்சி ஒற்றை திருக்கை மாட்டுவண்டியின் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாசார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.
ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நட்டஈட்டை வழங்குவதற்கான காலத்தை குறைக்க தேசிய அக்ரஹார காப்புறுதி நிறுவனம் விசேட திட்டம்!
புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு நாளை - நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பா...
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சினமன் எயார் விமான சேவை ஆரம்பம் !
|
|
|


