அத்தியாவசிய பணியாளர்களைத் தவிர வேறெரும் மாகாண எல்லைகளைக் கடக்க முடியாது – புதிய சுகாதார நடைமுறைக்கு வருவதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021

மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடு இன்றுமுதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் மாகாண எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்..

மேலும் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, முன்னர் பரிந்துரைக்கப்பட்ட 150 பேரில் இருந்து திருமணத்துக்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையை 50 ஆக மட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் சுகாதார அமைச்சு புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளின் தொகுப்பை இன்று மாலை வெளியிடும் என்று குறிப்பிட்ட இராணுவத் தளபதி, நாட்டை முடக்குதல் அல்லது நாடளாவிய பயணக் கட்டுப்பாடுகள் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: