இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஏற்பாடு – எதிர்வரும் 24 ஆம் திகதி கதிர்காமக் கந்தனின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை!
Sunday, October 22nd, 2023
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில், வள்ளி – தெய்வானை சமேத கதிர்காமக் கந்தனின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை நிகழ்வு எதிர்வரும் 24 நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதனடிப்படையில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, குறித்த வள்ளி – தெய்வானை சமேத கதிர்காமக் கந்தனின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை நிகழ்வு எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணிக்கு, கூட்டுத்தாபன வளாகத்தில் நடைபெறவுள்ளதாக, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் இரத்தினசிங்கம் கணபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் வழிகாட்டலில் பொறியியலாளர் சண்.குகவரதன் மற்றும் எம்.டி.எல். குணரத்ன ஆகியோரின் பங்குபற்றுதலுடன் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்துசிறப்பிக்குமாறு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் இரத்தினசிங்கம் கணபதிப்பிள்ளை கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


