இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்ள சீன மக்களும் சீன அரசாங்கமும் துணை நிற்கும் – இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தெரிவிப்பு!
Monday, November 6th, 2023
இலங்கை எதிர்கொள்ளும் சவால்களுக்கு சீன மக்களும் சீன அரசாங்கமும் துணை நிற்க தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.
சீனாவின் நிதி உதவியின் கீழ் இலங்கையில் உள்ள ஏழை மக்களுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு சீன பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் கருத்து கூறுகையில் -,
“இலங்கை மக்களுக்கு கஷ்டமான காலங்களில் உதவ நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம். சீன அரசாங்கம் வடமாகாணத்திற்கு 150 மில்லியன் நிதியை வழங்குவதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது. அதற்கான ஏற்பாடகள் இடம்பெற்று வருகின்றன.
அதில் குறிப்பிட்ட சதவீதம் 33 வீதம் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கை எதிர்கொள்ளும் சவால்களுக்கு சீன அரசாங்கமும் மக்களும் கை கொடுக்க தயாராக உள்ளனர்.” என்றார்.
000
Related posts:
|
|
|


