இலங்கை உட்பட 93 நாடுகளுக்கு விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல அனுமதி – 60 நாள்கள் விசா இல்லாமல் தங்கலாம் என தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
Monday, July 15th, 2024
இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று (15) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக முதல் தடவையாக இலங்கையர்களுக்கு விசா இன்றி தாய்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது
தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, விசா இல்லாமல் தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் திரும்புவதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்பதுடன், அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவதும் கட்டாயமாகும்.
தாய்லாந்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சாரதிகளுக்கான தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும்- தனியார் பஸ் உர...
போர்த்துக்கல் காட்டுத்தீ: பாதிக்கப்பட்டவர்களுக்காக பாப்பரசர் சிறப்பு பிரார்த்தனை!
அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிக்கும்!
|
|
|


