இலங்கை – உக்ரேன் அரசாங்கங்களுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பு ஆணையகம்!
Saturday, May 12th, 2018
இலங்கை மற்றும் உக்ரேன் அரசாங்கங்களுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு ஆணையகம் ஒன்றை உக்ரேன் ஸ்தாபிப்பதற்கு அந்நாட்டு அமைச்சரவையின் அனுமதிகிடைத்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே குறித்த திட்டத்தின் நகல் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை மற்றும் சட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பங்கு கொள்ளும் உக்ரேன் பிரதிநிதிகள் குழுவிற்கான அனுமதி கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோவினால் (Petro Poroshenko) வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான முதலீடுகளுக்கு உரிய பாதுகாப்பும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஓய்வூதிய வயதெல்லை 60 ஆக அதிகரிப்பு - 50 வயது பூர்த்தியடைந்த பெண்களும் 55 வயது பூர்த்தியடைந்த ஆண்களும...
இலங்கை நெருக்கடியிலிருந்து நிதி விவேகம் மற்றும் நல்லாட்சி போன்ற படிப்பினைகளை இந்தியா கற்றுக்கொண்டுள்...
அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல. பொதுமக்களின் சேவகர்கள் - வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் மீண்டும் வலியுறுத்த...
|
|
|


