இலங்கை – இந்திய இராணுவத் தளபதிகள் சந்திப்பு !

Wednesday, October 13th, 2021

ஐந்து நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார்.

பத்தரமுல்லை – அக்குரேகொடவில் உள்ள இராணுவ தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இலங்கை இராணுவத்திற்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது தொடர்பாக இரு நாடுகளினதும் இராணுவத் தளபதிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பிலும் இராணுவத் தளபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதன்போது, முதிர்ச்சியடைந்த இரண்டு ஜனநாயக நாடுகளில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையே நிலவும் சிறந்த உறவுக்கு நிகரான உறவு இரு நாட்டு இராணுவங்களுக்கு இடையிலும் காணப்படுவதாக ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கை இராணுவம் COVID முகாமைத்துவத்தை மகத்தான முறையில் செயற்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அனைத்து பாடசாலைகளிலும் சுகாதார வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் - கல்வி அமைச்சர் பேராசிரியர...
தீவகத்திற்கென தனியான போக்குவரத்து சாலை உருவாக்கப்டபட வேண்டும் – ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உ...
குறைந்தளவான விளைச்சல் கிடைக்கப்பெறும் விவசாயிகளுக்கு மாத்திரம் இழப்பீடு - விவசாய அமைச்சர் மகிந்தானந்...