இலங்கையை பின்னிலைப் படுத்தியுள்ள அமெரிக்கா!
Friday, June 21st, 2019
ஆட்கடத்தல் விடயத்தில் இலங்கையை, அமெரிக்கா தமது வருடாந்த அறிக்கையில் பின்னிலைப் படுத்தியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நேற்று இந்த அறிக்கை வெளியாக்கப்பட்டது. இதில் இலங்கையை ஆட்கடத்தல் விடயத்தில் இரண்டாம் அடுக்கில் கண்காணிப்பு பட்டியலில் தரப்படுத்தி இருப்பதாக இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. எனினும் முந்திய ஆண்டைக்காட்டிலும் தற்போது இந்த விடயத்தில் அரசாங்கம் ஓரளவுக்கு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
அதேநேரம் இந்த விடயத்தில் அரசாங்கத்தின் மேலதிக செயற்பாடுகள் தேவைப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
ஏப்ரல் மாதம் முதல் ரயில் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும்!
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் கழிவுகளால் கடற்கரை பகுதிகள் பாதிப்பு - மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெ...
அதிகம் கடன்பட்ட நாடுகளுக்கு உதவ பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்கத் தயார் - சீன பிரதமர் சர்வதேச நாணய நி...
|
|
|


