இலங்கையை நெருங்கியது புரவி சூறாவளி – எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரிக்கை!

புரவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 7.10 இற்கு தரைதொடும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 75 கிலோமீற்றர் முதல் 85 கிலோ மீற்றர் வரை வீசலாம் எனவும் வளிமண்டலவில் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கடல் பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதால் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களில் மழை பெய்து வருவதோடு, திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
தகவல் அதிகாரிகளது விபரங்கள் இணையத்தளத்தில்!
வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம் இன்று
மார்ச் 3 முதல் புழக்கத்திற்கு வருகிறது இரண்டு ரூபா புதிய நாணயம்!
|
|