தகவல் அதிகாரிகளது விபரங்கள் இணையத்தளத்தில்!

Sunday, August 6th, 2017

அமைச்சுக்கள், திணைக்களங்கள், உள்ளுராட்சி மன்றங்கள், பிரதேச செயலாளர் பிரிவுகள் உட்பட அரச நிறுவனங்களுக்கு தகவல் அதிகாரிகளை நியமிக்கும் பணியில் 95 சதவீதமானவை பூர்த்தியடைந்துள்ளன.

இதுதொடர்பாக தகவல் அறியும் பேரவையின் பணிப்பாளர் நாயகம் ஜயதிஸ்ஸ ரணசிங்க தெரிவிக்கையில் ,தகவல் அறியும் அதிகாரியொருவர் இல்லாத நிறுவனத்தின் தலைவர் உரிய அதிகாரியொருவரை நியமிக்க கடமைப்பட்டுள்ளதாகவும்; சுட்டிக்காட்டிய பேரவையின் பணிப்பாளர் நாயகம் , தகவல் அதிகாரிகள் தொடர்பான விபரங்களை இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். அதன் முகவரி றறற.சவi.பழஎ.டம என்பதாகும். தகவல் அறியும் சட்டத்தை வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்த மக்களின்; ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினார்.

தகவல் அறியும் சட்டத்தை அமுல்படுத்தும் தெற்காசிய நாடுகளுக்கு மத்தியில் இலங்கை முன்னேறியுள்ளது. இலங்கை இதில் 80 சதவீத முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. நிறுவனங்களில் நியமிக்கப்பட்டுள்ள தகவல் அறியும் அதிகாரிகளுக்கு, தகவல் அறியும் விடயங்களுடன் தொடர்புடைய 200 விண்ணப்பங்கள் கிடைப்பதாகவும் தகவல் அறியும் பேரவையின் பணிப்பாளர் நாயகம் ஜயதிஸ்ஸ ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: