இலங்கையுடன் டொலர் அல்லாத பரிவர்த்தனையை மேற்கொள்ளப்பட்டதாக பாரத ஸ்டேட் வங்கி தகவல்!
Friday, March 3rd, 2023
இலங்கை ரூபாவில் ஏற்றுமதிக்கான பணத்தைச் செலுத்தி இலங்கையுடனான தமது முதல் டொலர் அல்லாத பரிவர்த்தனையை இன்று மேற்கொண்டதாக பாரத ஸ்டேட் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறையாக உள்ள நாடுகளை வர்த்தகப் பொறிமுறைக்குள் கொண்டு வர இந்தியா எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த பரிவர்த்தனை இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்குப் பின்னர், டொலர் பற்றாக்குறையால் மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ளும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ் இந்தியத் தூதுவராக எஸ்.பாலச்சந்திரன் !
ஆயுத விற்பனையில் இந்தியா முன்னிலையில்!
அரிசிக்கான விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு – அமைச்சர் பந்துல குணவர்த்தன!
|
|
|


