இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்த இந்தியா எதிர்பார்ப்பு – கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவிப்பு!
Monday, September 6th, 2021
அண்டை நாடு முதலில் என்ற கொள்கையின் ஒரு பகுதியாக இலங்கையுடனான தனது இராணுவ உறவுகளை வலுப்படுத்த, இந்தியா எதிர்பார்ப்பதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கை ஆயுதப்படைகளின் ஆளுமை மேம்பாடு உட்பட ஒட்டுமொத்த திறன் மேம்பாட்டிற்கு இந்தியா பங்களிக்கிறது என்றும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு சேவைகளில் இலங்கை ஆயுதப்படைகளின் அதிகாரிகளுக்கு, இந்தியாவுக்கான சர்வதேச ஒத்துழைப்பு பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் 39 படை அதிகாரிகளுக்காக, இந்திய உயர்ஸ்தானிகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பயணம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்ட குறிப்பிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் விடுதலை
படைப்புழுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளது சோள உற்பத்தியை விவசாயிகள் மீண்டும் ஆரம்பிக்கலாம் - விவசாய திணைக்கள...
கொரோனாவை முழுமையாக ஒழிப்பேன்- அரசியல் இனம் மதம் என்ற பேதங்கள் கிடையாது - பிரதமர் மஹிந்த விசேட உர...
|
|
|


