இலங்கையில் 3 இலட்சம் டொலர் முதலீட்டு செய்தால் குடியிருப்பு வீசா – நிதியமைச்சர்!

Friday, January 13th, 2017

இலங்கையில் குறைந்தபட்சம் 3 இலட்சம் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் வெளிநாட்டவர், குடியிருப்பு வீசாவுக்கு விண்ணப்பிக்கும் நிலையில் அது தொடர்பில் ஆராயப்பட்டு, 5 வருடம் வரையிலான குடியிருப்பு வீசாவை வழங்கவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (12) நிதியமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில், வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதன் மூலம் நேரடி வெளிநாட்டு ஊக்குவிப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

அதன் அடிப்படையில் குறைந்தபட்சம் 3 இலட்சம் அமெரிக்க டொலர்களை (USD 300,000) முதலீடு செய்யும் வெளிநாட்டவர், குடியிருப்பு வீசாவுக்கு விண்ணப்பிக்கும் நிலையில் அது தொடர்பில் ஆராயப்பட்டு, 5 வருடம் வரையில் அமையும் வகையிலான குடியிருப்பு வீசாவை வழங்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.டி குறித்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய சட்டதிட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 ravi-Karu-Visa

Related posts: