இலங்கையில் வீதிப் போக்குவரத்து போலிஸார் ‘ஸ்பீட் கன்’ பயன்படுத்த முடியாது!

Sunday, September 18th, 2016

நாட்டில் அளவுக்கு அதிகமான வேகத்தில் செல்கின்ற வாகனங்களை பிடிப்பதற்கு ராடார் வேகக் கருவிகளை பயன்படுத்தக்கூடாது என்று போக்குவரத்துப் போலிஸாருக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

எனினும், கவனயீனமாகவும் அபாயகரமாகவும் பயணிக்கின்ற வாகனங்களை பிடிப்பதற்கு இந்தக் கருவிகளை போக்குவரத்து போலிஸார் இதுவரை பயன்படுத்திவந்துள்ளனர்.

தற்போது அதற்கும் ராடார் வேகக் கண்காணிப்புக் கருவிகளை பயன்படுத்த முடியாதவாறு புதிய உத்தரவொன்றை போலிஸ் தலைமையகம் விடுத்துள்ளது.

தற்போதைய வாகனப் போக்குவரத்து விதிகளிலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அவற்றைத் திருத்துவதற்கான முன்னெடுப்பை எடுத்திருந்த இலங்கை போக்குவரத்து காவல்துறையின் முன்னாள் துணை போலிஸ்மா அதிபர் டி. பேரின்பநாயகம் விளக்கியுள்ளார்.

Untitled-1 copy

Related posts: