இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க சீனா திட்டம்!
Monday, June 18th, 2018
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடுகளை மேலும் அதிகரிக்க தாம் தயார் என சீனா தெரிவித்துள்ளதாக சீனாவின் இலங்கைக்கான தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஒருவழி மற்றும் ஒரு பாதை வேலைத் திட்டத்தின் கீழ் தெற்காசிய வலய நாடுகள் மத்தியில் புரிந்துணர்வு மேம்படுத்தப்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை இது தொடர்பில் செயற்பாட்டுத் தளமாக விளங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது சீனா பல்வேறு துறைகளில் முதலீடுகளை வழங்கி வருகிறது. அந்த முதலீடுகள் எதிர்வரும் காலத்தில் மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
இலங்கை இந்திய பிரதமர்கள் எதிர்வரும் புதன்கிழமை சந்திப்பு!
நாடாளுமன்றுக்கு அதிக பாதுகாப்பு அவசியம் - சபாநாயகர் மஹிந்த யாப்பா வலியுறுத்து!
”சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கை...
|
|
|


