ஆரம்ப பாடசாலையினை தரத்தினை உயர்த்த நடவடிக்கை – கல்வி அமைச்சர்!

Wednesday, November 22nd, 2017

ஆரம்ப பாடசாலை கல்வியினை செயல்திறன் மிக்கதாக உயர்த்த கல்வியமைச்சு, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு ஆகியவை ஒன்று சேர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப பாடசாலை கல்வியானது பிள்ளைகளின் வாழ்வின் அடிப்படையான அத்திவாரம் எனவும் ஆதலால், அதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார். சர்வதேச ஒத்துழைப்புடன் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்கவும், ஆரம்ப பாடசாலைக்கு தேவையான வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்

Related posts: