கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு – நாட்டு மக்களுக்கு சுகாதார பிரிவு கடும் எச்சரிக்கை!

Wednesday, July 27th, 2022

இலங்கையில் நேற்றையதினம் 119 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற 5 மரணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் உறுதிப்படுத்தினார்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபுகளின் காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தொற்றுநோய் பிரிவின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே, உரிய தடுப்பூசிகளை கூடிய விரைவில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இலங்கை பல சந்தர்ப்பங்களில் கொரோனா வைரஸின் தாக்கங்களை எதிர்கொண்டுள்ளதுடன், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 6 இலட்சத்து 65 ஆயிரத்து 94 ஆகும். அத்துடன் மொத்தமாக 16 ஆயிரத்து 544  கொவிட்  உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை ஒரு கோடி 45 இலட்சத்து 53 ஆயிரத்து 903 பேர் மட்டுமே இரண்டாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர். 803,782 பேர் மூன்றாவது தடுப்பூசி அல்லது செயலூக்கி (பூஸ்டர்) தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

அத்துடன் சுமார் 15,280 பேர் இரண்டாவது பூஸ்டர் அல்லது நான்காவது தடுப்பூசியைப் பெற்றுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

முகக்கவசம் அணியாத இருவருக்கு 22 ஆயிரத்து 500 ரூபா அபராதம் - பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் தீர்ப்...
பேருந்து கட்டண திருத்தத்தை கணிப்பிடுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு இராஜாங்க அமைச்சர் திலும்...
நேற்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் நீர்க்கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!