இலங்கையில் புதிய சட்டம் அமுல்!

Saturday, June 23rd, 2018

நாட்டில் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்துவதற்காக புதிய சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் உற்பத்தி துறை நவீனமயமாகியுள்ளது. இது 1977ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திறந்த பொருளாதார கொள்கையின் அடிப்படையில் சாத்தியப்பட்டுள்ளது.

பலர் திறந்த பொருளாதார கொள்கைக்கு அஞ்சினர். எனினும் தற்போது நாட்டின் உற்பத்திகள் சர்வதேச உற்பத்திகளுடன் போட்டியிடும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளன.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்த சட்டங்கள் உருவாக்கப்பட்டு தரம் அற்ற விலைகுறைந்த பொருட்களை இறக்குமதி செய்வது தடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தொழில்துறையை பாதுகாக்கும் நோக்கிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: