புதுக்குடியிருப்பில் ஆண்களை விட பெண்களே அதிகம் – பிரதேச செயலக புள்ளிவிவரம்!

Tuesday, April 3rd, 2018

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் இரண்டாயிரத்து 45 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்ற அதேவேளை புதுக்குடியிருப்பில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது என்று புதுக்குடியிருப்புப் பிரதேச செயலக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவுக்குச் சென்ற நிதி அமைச்சர் போரில் பாதிக்கப்பட்ட நிலையில் பெண்களைத் தலைமைத்துவக் குடும்பங்களைப் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் நிதி அமைச்சருக்கு புதுக்குடியிருப்புப் பிரதேச மக்களின் நிலை தொடர்பான புள்ளிவிவரம் ஒன்றைக் கையளித்தார். அந்தப் புள்ளிவிவரத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் உள்ளதாவது:

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் 13 ஆயிரத்து 248 குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்து 353 அங்கத்தவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இதில் 20 ஆயிரத்து 748 பெண்கள் காணப்படுகின்றார்கள். பிரதேசத்தில் பெண்களே அதிகளவில் காணப்படுகிறார்கள். புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் 2 ஆயிரத்து 45 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

போரால் கணவனை இழந்த பெண்களாக 178 பேர் உள்ளனர். ஆதரவற்றவர்கள் 156 பேரும் மாற்றுத் திறனாளிகள் 707 பேரும் மறுவாழ்வளிக்கப்பட்டவர்கள் 957 பேரும் உள்ளனர் என்றுள்ளது.

Related posts: