இலங்கையில் நடைபெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

Thursday, April 23rd, 2020

இன்றையதினமும் இலங்கையில் நடைபெற்ற பி.சி.ஆர் எனப்படும் கொரோனா தொற்று பரிசோதனையில் நால்வருக்கு  அத்தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளளது.

இதேவேளை கொழும்பில் கொரோனா அபாய பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அங்கிருந்து பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்த 8 பேரும் சாரதியும் நேற்று இரவு இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து யாழ்ப்பாணத்தில் சுவிஸ் போதகரினால் ஏற்பட்ட கொரோனா தொற்றின் அச்சநிலை தற்போதுதான் ஓய்ந்துள்ள நிலையில் குறித்த நபர்களின் அத்துமீறிய நடவடிக்கையை அடுத்து யாழ்ப்பாணத்தை மீளவும் கொரோனாத் தொற்றின் அபாயத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் மக்களிடையே அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

குருநகர், பீச் வீதியைச் சேர்ந்த ஒருவர், யாழ்ப்பாணம் ஐந்துசந்தி- ஒஸ்மானியா வீதியைச் சேர்ந்த ஒருவர், சங்கானை- ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவர், சுழிபுரம் – தொல்புரத்தைச் சேர்ந்த ஒருவர் தெல்லிப்பழையில் ஒருவர், நாவற்குழி வீட்டுத்திட்டம் பகுதியைச் சேர்ந்த மூவர் மற்றும் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சாரதி ஆகிய ஒன்பது பேரே இவ்வாறு தனிமைப்படுதலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

சாரதி யாழ்ப்பாணத்தில் இருந்து அத்தியாவசி சேவைக்கான அனுமதிப்பத்திரத்துடன் சென்றுள்ள நிலையில் ஏனையவர்கள் தொழில்நிமித்தம் கொழும்பில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மலரும் தீபத்திருநாள் எமது மக்களுக்கான வாழ்வியல் விடிவை பெற்றுத்தரும் நாளாக அமைய வேண்டும் - முன்னாள் ...
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு தேசிய நிகழ்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகை -ஜனாதிபதி கோட்டபாய!...
கொரோனாவின் இரண்டாவது அலை முதலாவது அலையிலிருந்து வேறுபட்டது - குறைபாடுகள் அனைத்தும் நாளாந்தம் தீர்க்...