கொரோனா தாக்கம்: எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு – இராணுவத்தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை!

Tuesday, August 25th, 2020

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் பொதுமக்கள் தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று முழுமையாக நாட்டில் இருந்து அகற்றப்படவில்லை என்ற அடிப்படையில், வைரஸ் தொற்றுக்கான எதிர்ப்பு செயற்பாடுகளை குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுள்ளார்.

இலங்கையை பொறுத்தவரை கொரோனாத் தொற்று இன்னும் சமூகத்தில் பரவவில்லை. எனினும் இதற்கான ஆபத்தை நிராகரித்து விடமுடியாது என்று சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கைக்குள் வரும் கொரோனா வைரஸ் தொற்றாளிகள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களேயாகும். வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை தொடர்ந்தும் வரவழைக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களும் கொரோனா வைரஸ் தொடர்பில் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: